மரகதா சிவலிங்கம். கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 2010. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டர்ஸ், 70/7 கனால் வீதி, ஹெந்தளை).
174 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 955-9396-12-9.
பண்டிதை திருமதி மரகதா சிவலிங்கம் ஏற்கெனவே நாடறிந்த பெரியோர்கள் என்ற நூலை எழுதிப் புகழ்பெற்றவர். மிகப் பழமைவாய்ந்த இந்து சமயம் பல விரத விழாக்களை அனுஷ்டிக்கும் வழிமுறைகளை விளக்கி நிற்கின்றது. இந்நூலில் சிக்கலற்ற எளிய நடையில் விரதங்கள் குறித்த திதி, நாள் நிர்ணயங்களைத் தெரிவிப்பதோடு மட்டும் அமையாமல் “நாதவிந்து கலாதி நமோநம” போன்ற பக்திப் பனுவல் அடிகளையும் வேண்டிய இடங்களில் பயன்படுத்தி சைவசமயத்தில் கடைப்பிடிக்கப்படும் விரதங்கள்-பண்டிகைகளை விளக்கமாகக் குறிப்பிடுகின்றார்.