8155 சைவப் பிரகாசிகை: நான்காம் புத்தகம்.

ச.குமாரசுவாமிக் குருக்கள். யாழ்ப்பாணம்: சிவஸ்ரீ வைத்தியேசுவரக் குருக்கள், ஐந்தாம் பதிப்பு, நந்தன வருடம் மாசி 1953. (பருத்தித்துறை: கலாநிதியந்திரசாலை).

(4), 64 பக்கம், படங்கள், விலை: சதம் 75., அளவு: 21.5×13.5 சமீ.

அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலை மானேசர் சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்கள் அவர்களால் எழுதப்பெற்று, மேற்படி குருக்களவர்களின் புத்திரர் சிவஸ்ரீ வைத்தியேசுவரக் குருக்களால் வெளியிடப்பெற்ற நூல் இது. இந்நூலில் விநாயகக் கடவுள், ஸ்ரீராமபிரான் சிவபூசை செய்தது, பலராமர், கிருஷ்ணர் (1-2), பகீரதாரசன், தனபாலன், அகத்திய முனிவர், அந்தகாசுரன் சாரூபம் பெற்றது, சிலந்தியும் சர்ப்பமும் யானையும், சிவபெருமான் தாயானது, பொய், ஆலய தரிசனம், மதுரை, திருவாப்பனூர், நாகபட்டணம், திருப்பெருந்துறை, பழநி, மயூரகிரி, சீர்காழி, திரிபுரசங்காரம், பிக்ஷாடனர், இடப தேவருக்குப் பால் அருத்தியது, சிவஞான முனிவர், சங்கர பண்டிதர் ஆகிய 25 தலைப்புகளில் சிறு சைவக் கட்டுரைகள் மாணவர்கள் புரிந்துகொள்ளும்வகையில் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 117401).

ஏனைய பதிவுகள்