8161 தேவாரம், திருமுறை – திரட்டு.

மு.கணபதிப்பிள்ளை (தொகுப்பாசிரியர்). சென்னை 600002: காந்தளகம், 68 அண்ணா சாலை, 1வது பதிப்பு (இந்தியா), 2002, 1வது பதிப்பு (இலங்கை), 1973. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்).

168 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 18×12 சமீ.

தொகுப்பாசிரியர் மு.கணபதிப்பிள்ளை, யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி-மறவன்புலவுவில் பிறந்தவர். (15.12.1910-19.11.1993). யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் தமிழாசிரியராகவும், துணைத் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றியவர். யாழ்ப்பாணம், ஸ்ரீகாந்தா அச்சகம், யாழ்ப்பாணம்-சென்னை ஆகிய இடங்களில் இயங்கும் காந்தளகம் பதிப்பகம் ஆகியவற்றின் நிறுவனர். கைதடி கிராமசபை, யாழ்ப்பாணம் சைவ பரிபாலன சபை, திருக்கேதீச்சர ஆலயத் திரப்பணிச்சபை முதலியவற்றின் உறுப்புரிமை பெற்றிருந்தவர். கந்தபுராணம், சிவராத்திரி புராணம் முதலிய நூற்றுக்கணக்கான சைவத்தமிழ் நூல்களைப் பதிப்பித்தவர்.  இவரால் தொகுக்கப்பெற்றுள்ள இந்நூலில்  சிவபுராணம், திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, திருப்பொற்சுண்ணம், ஈழநாட்டுத் திருத்தலங்களுக்கான திருக்கேதீச்சரப் பதிகம், திருக்கோணமலைப் பதிகம் என்பன முழுமையாக இடம்பெற்றுள்ளன. இவை தேவாரம்/திருவாசகம்/திருவிசைப்பா/திருப்பல்லாண்டு/திருமந்திரம்/ பொன்வண்ணத்தந்தாதி/பெரியபுராணம்/தோத்திரப்பாக்கள்/பக்திப்பாடல்கள் ஆகிய அத்தியாயத் தலைப்புகளில்  தொகுக்கப்பட்டுள்ளன.  நூலின் இறுதியில் பாட்டுச் சுட்டி காணப்படுகின்றது. (நூலில் முதற் பதிப்பு 1973 எனவும், தொகுப்பாசிரியர் உரை எழுதப்பட்ட திகதி 1.8.1985 எனவும் முரண்பாடாகக்  குறிப்பிடப்பட்டுள்ளது).

ஏனைய பதிவுகள்

12167 – முருகன் பாடல்: முதலாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).