மட்டுவில் ஆ.நடராஜா. யாழ்ப்பாணம்: ஆ.நடராஜா, வஞ்சி, பத்தாவத்தை, இளவாலை, 1வது பதிப்பு, 1990. (தெல்லிப்பழை: குகன் அச்சகம்).
30 பக்கம், விலை: ரூபா 12.50, அளவு: 18.5×12.5 சமீ.
இளவாலை ஆனைவிழுந்தான் விநாயகர் ஆலய வரலாற்றை எதிர்காலத்தில் விரிவாக எழுதமுனையும் ஆய்வாளர்களுக்கு உதவும் வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பழமைவாய்ந்த அவ்வாலயம் பற்றித் தேடித் தொகுத்த செய்திகளை இந்நூலில் ஆசிரியர் பதிவுசெய்திருக்கின்றார். இந்நூலில் மேலதிகமாக விநாயகர் திருப்பதிகமும் சேர்க்கப்பட்டுள்ளது. நூலுக்கான அணிந்துரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறைத் தலைவர் கலாநிதி ப.கோபாலகிருஷ்ணன் வழங்கியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமகாராஜா இந்நூல் வெளிவர முக்கிய காரணியாக இருந்திருப்பதை ஆசிரியர் தன் முகவுரையில் குறிப்பிட்டிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 217845).