ஸபீர் ஹாபிஸ். (இயற்பெயர்: மௌலவி அல்ஹாபிஸ் எம்.யூ. எம்.ஸபீர்). கொழும்பு: அல்ஹூதா பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (கொழும்பு: ஹாபிஸ் கம்பியூட்டர் சென்டர்).
88 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-8911-22-8.
The Islamic Revolution of Imam Hussein என்ற ஆங்கிலத் தலைப்புடனும் வெளிவந்துள்ள இந்நூலை ஆசிரியர் மூன்று இயல்களில் எழுதியிருக்கிறார். இமாம் ஹூஸைன்-அலை-அவர்கள் (அறிமுகம், இமாம் ஹூஸைன் -அலை- அவர்களின் சிறப்புக்கள்), கிலாபத் மாற்றம் (உமையா வம்சம், யசித் கலீபாவாகுதல்), இமாம் ஹூஸைனின் எழுச்சியும் கர்பலாவும் (இமாம் ஹ{ஸைன் -அலை- அவர்களின் இலட்சியப் பயணம், விளைவுகள்) ஆகிய மூன்று இயல்களில் இவ்வரலாறு விரிகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 229810).