ஸபீர் ஹாபிஸ். கொழும்பு : அல்ஹூதா பப்ளிக்கேஷன், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (அச்சிட்ட ஊர்விபரம் தரப்படவில்லை, ஹாபிஸ் கம்பியுட்டர்
115 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ. ISBN: 978-955-8911-18-1.
ஆசிரியரின் பல்வேறு இஸ்லாமிய கட்டுரைகளிருந்தும் தேர்ந்த எட்டுக் கட்டுரைகளின் தொகுப்பே இதுவாகும். இஸ்லாம்-சமாதானத்திற்கான மார்க்கம், தண்ணீர்-அறிவியல் நோக்கிலான அல்குர் ஆனின் கருத்தியல், இஸ்லாமிய நாகரிகமும் ஐரோப்பிய மறுமலர்ச்சியில் அதன் தாக்கமும், இஸ்லாத்தின் அழகியல் கோட்பாடு, இஸ்லாத்தில் கற்றல் கற்பித்தல், இஸ்லாம் வலியுறுத்தும் ஜிஹாதும் அதன் பண்புகளும், இஸ்லாமிய வாரிசுச் சொத்துரிமை: ஓர் அறிமுகம், அரபு எழுத்தணிக் கலை ஆகிய எட்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 229800).