8208 யாழ்ப்பாணம்: மொழியும் வாழ்வும் ஓர் அறிமுகக் கையேடு.

மனோன்மணி சண்முகதாஸ், மயில்வாகனம் இரகுநாதன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, 1வது பதிப்பு, சித்திரை, 2006. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ், இல. 424 காங்கேசன்துறை வீதி).

iv, 192 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 24.5×18.5 சமீ., ISBN: 955-1452-00-3.

இந்நூலில் யாழ்ப்பாணம் தொடர்பாக எழுதப்பட்ட 26 கட்டுரைகள் அடங்கியுள்ளன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் சிதம்பரப்பிள்ளை சிவலிங்கராசா அவர்களின் அறுபதாவது அகவை நிறைவினையொட்டிய நிகழ்வின் நினைவாக இந்நூல் அவருக்குக் காணிக்கையாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத் தமிழில் சங்கத்தமிழ் (அ.சண்முகதாஸ்), யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் சொல்லும் பொருளும் (ச.தனஞ்செயராசசிங்கம்), யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு (சுபதினி ரமேஷ்), யாழ்ப்பாணப் பேச்சுத்தமிழில் பிறமொழிச் சொற்கள் (செல்வ அம்பிகை நடராஜா), இன்பத்தமிழ் (தம்மரத்தின தேரோ), யாழ்ப்பாணத்து இலக்கணக் கல்வி மரபு (பொ.செங்கதிர்ச்செல்வன்), ஞானப்பிரகாச சுவாமிகள் (வி.செல்வநாயகம்), யாழ்ப்பாணப் பிரதேச நீர்வளமும் வாழ்வும் (எஸ்.டி.பி. இராஜேஸ்வரன்), யாழ்ப்பாணத் தமிழரின் உணவுப் பழக்கங்கள் (மனோன்மணி சண்முகதாஸ்), யாழ்ப்பாணத்தில் மூவலகு வீடுகள் (பா.அகிலன்), பாரம்பரிய அணிகலன்களுக்கூடாக அறியப்படும் யாழ்ப்பாண மரபும் பண்பாடும் (செ. கிருஷ்ணராஜா), யாழ்ப்பாணத் தமிழரிடையே வழங்கும் நாட்டுப்புற நம்பிக்கைகள் (கி.விசாகரூபன்), யாழ்ப்பாணத்தில் சாதியும் மதமும் ஈழத்தமிழ் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேடல் (ம.இரகுநாதன்), யாழ்ப்பாணத்துக் கோயில் கலைகள்: ஒரு வரலாற்று நோக்கு (ஈ.குமரன்), யாழ்ப்பாணத்துக் கோயில் வழிபாட்டில் சாத்துப்படிக் கலை (நாச்சியார் செல்வநாயகம்), தென்னிந்தியச் சிற்பக்கலைக் கோட்பாடுகளும் அவை யாழ்ப்பாணத்துக் கலைமரபிற் பயிலப்படும் முறைமையும் (ஏ.என்.கிருஷ்ணவேணி), யாழ்ப்பாணத்துச் சித்தர்கள்: ஓர் அறிமுகம் (கலைவாணி இராமநாதன்), யாழ்ப்பாணத்துப் பண்பாட்டுப் பேணலில் பெண்கள் (செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம்), யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் (க.கணபதிப்பிள்ளை), கிறிஸ்தவ சமயமும் தமிழ்ப் பண்பாடும் ( ஞா.பிலேந்திரன்), தமிழ்ச் சமுதாயத்தில் பிரசங்க மரபின் தோற்றமும் வளர்ச்சியும் சில குறிப்புகள் (எஸ்.ஜெபநேசன்), யாழ்ப்பாணத்தில் சைவத்தின் காவலர் நாவலர் (அருள்நங்கை சண்முகநாதன்), ஸ்பெஷல் நாடக மரபின் வாழ்வும் வளமும்: ஓர் ஒப்பியல் நோக்கிற்கான ஆரம்பம் ( த.கலாமணி), யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களின் இன்றைய அபிவிருத்தி நிலையும் எதிர்கால இடம்சார்ந்த அபிவிருத்தித் திறமுறைகளும் (பொ.பாலசுந்தரம்பிள்ளை), யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் (கா.குகபாலன்), இலத்திரனியல் வர்த்தகம் (க.தேவராஜா) ஆகிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Czym ma się stać nomini kasyno bonus?

Nomini Telefonicznie można zwracać się do kasyna w godzinach od 10. Wpisz swoje dane i dokończ rejestrację. Zakłady bukmacherskie live, które oferuje kasyno Nomini, to

På Idræt Crime Teater Slot Spillemaskiner

Content Idrætsgren Vederlagsfri Syvkabale: Forsøge Lykken Inklusive Et Klassisk Casinospil – ash gaming mobile slots Månedens Casino Spil Vederlagsfri Badetøj Bal Spilleautomat Vaša Online Trgovina