எஸ்.அரசரெத்தினம். கல்முனை: சத்தியா பப்ளிக்கேஷன்ஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(4), 68 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.
அன்றாடக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சிலவற்றைத் தெரிந்து, அவற்றை விளக்கி, அதற்கான பரிகாரங்களையும் கூறும் ஆசிரியர், நிஜ உதாரணங்களை தான் வாழும் சமூகத்திலிருந்து கண்டெடுத்து துணிச்சலுடன் தனது கருத்துக்கு வலுச்சேர்க்கும்பொருட்டு முன்வைத்திருக்கிறார். வளமான வாழ்வைத் தேடி, பொருளாதாரப் பிரச்சினைகள், சீதனப் பிரச்சினைகள், விரும்பாத திருமண வாழ்க்கை, வீட்டில் உறவினர்கள் தங்கியிருத்தல், பிள்ளைகள் இல்லாப் பிரச்சினைகள், பிள்ளைகளால் ஏற்படும் பிரச்சினைகள், கல்வி வேறுபாடும் தொழிலும், கணவன்/மனைவி வேறொரு தொடர்பு, மறுமணம் செய்திருத்தல், மிதமிஞ்சிய குடி/போதைப்பொருள் பாவனைகள், பயணத்தின் முடிவில் விடைபெறும் வைபவம் ஆகிய பன்னிரண்டு விடயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21967).