8217 அரசறிவியல்: சுவிட்சர்லாந்தின் அரசியலமைப்பு.

ஏ.சீ.எம்.பளீல். கல்முனை: வெளிவாரிப் பட்டப்படிப்பு கல்வி நிலையம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2009. (கொழும்பு 13: Nawzeer Bros, No.24, Andival Street).

v, 55 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ.

2009ஆம் ஆண்டுமுதல் க.பொ.த. உயர்தர பரீட்சையில் சுவிட்சர்லாந்தின் அரசியலமைப்பும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. அதனால் அது பற்றிய அறிதலை மாணவர்களிடம் வழங்கும் வகையில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் சிறப்பியல்புகள், சுவிஸ் அரசியலமைப்பின் சிறப்புத் தன்மைகள், கூட்டாட்சியின் இயல்புகள், அரசியலமைப்பினைத் திருத்தும் முறை, சுவிஸ் நிர்வாகத்துறை (கூட்டாட்சி நிர்வாகக் குழு), சுவிஸ் சட்டத்துறை (கூட்டாட்சி மன்றம்-மாநிலங்கள் சபை, தேசிய சபை), சட்டமியற்றும் முறை, கூட்டாட்சி நீதித்துறை, சவிட்சர்லாந்தின் நீதிப் புனராய்வு, அரசியல் கட்சிகள் (தாராளக்கட்சி, தீவிரக் குடியரசுக் கட்சி, சமுதாயக் குடியரசுக்கட்சி, ரேடிகல் கட்சி, கத்தோலிக்க கன்சர்வேட்டிவ் கட்சி, சமதர்மக்கட்சி, சுதந்திரக்கட்சி), அமுக்கக் குழுக்கள், நேரடி மக்களாட்சி (மக்கள் தீர்ப்பு, மக்கள் தொடக்கம் அல்லது தொடக்கப் பொறுப்பு), மக்கள் வாக்கெடுப்பு, மீட்புரிமை) ஆகிய 12 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்