வேலுப்பிள்ளை குணரத்தினம். கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).
xii, 64 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-659-193-4.
அணுகுமுறை என்பது ஒரு விடயத்தை இலகுவாகவும் விரைவாகவும் தெளிவுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் வழிமுறையாகும். எந்தவொரு கற்கைத்துறையும் தனித்து ஒரு துறையோடுமட்டும் நின்று விருத்திபெறுவதில்லை. ஏனைய கற்கைத் துறைகளோடு இணைந்தே வளர்ந்துவருகின்றது. அரசறிவியலும் அதற்கு விதிவிலக்கானதல்ல. இதன் அடிப்படையிலேயே அரசறிவியல் கற்கைநெறியை ஆய்வு செய்வதற்கு பல்வேறு அணுகுமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அரசறிவியல் விஞ்ஞானத்தில் பயன்படுத்தப்படும் 13 அணுகுமுறைகள் பற்றி ஆராய்கின்ற இந்நூல் அவற்றிலே மெய்யியல், வரலாறு, ஒப்பீடு, சட்டம், நிறுவனம், உளவியல், பொருளாதாரம், நடத்தைவாதம் முதலான சமூகம்சார்ந்த அனுபவங்கள் அரசறிவியலை எந்தளவுக்கு வளப்படுத்தியுள்ளது என்பதனை ஒப்பீட்டுரீதியில் ஆய்வுசெய்கின்றது. குறிப்பாக 20ஆம் நூற்றாண்டின் பின்னர் அரசறிவியலில் மிக முக்கியமாக ஆய்வுசெய்யப்படும் நடத்தைவாதம் பற்றியும் முறைசார் அணுகுமுறையைப் பற்றியும் மேலும் ஆழமாக ஆராய்கின்றது. வே.குணரத்தினம், கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞானத்துறைத் தலைவராகப் பணியாற்றுகின்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசறிவியல்துறையின் இளங்கலை, முதுதத்துவமாணிப்பட்டங்களைப் பெற்றவர்.