சி.யமுனானந்தா. வெளியீட்டு விபரம் தரப்படவில்லை. 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).
iv, 81 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ.
தொன்மைத்தமிழும் அண்மைத்தமிழும் இன்மைத்தமிழும், தமிழ் இலக்கியத்திலிருந்து நாம் கற்கவேண்டிய அரசியல், இறப்பிற்கு முன் பகைவராக இருந்து அழிந்தாலும் இறந்த பின்பாவது நட்பை உருவாக்குவோம், இன நல்லிணக்கத்திற்குரிய அரசியலமைப்பு, மாசே துங்கிடம் இருந்து தமிழ் அரசியல் கட்சிகள் அறியவேண்டியவை, ஈழத்தமிழரின் போர் புறநாடூறுஉறு அளவும், போர்புற நானூறு உறுவீதமும், முள்ளிவாய்க்கால் நினைவுநாள், ஐ.நா.நிபுணர்குழு அறிக்கை, அராஜகதந்திரிகளின் இராஜதோல்வி, பாரதத்தின் புகையிரதப்பாதை நடவடிக்கை, யாழ். குடாநாட்டில் உள்ள மக்களது வாழ்வாதாரம், கல்வி மற்றும் சூழல் என்பவற்றினது பாதுகாப்பு, கல்வி மேன்மையடைய, போருக்குப் பிந்திய சூழலில் ஈழத்தமிழர்கள், ஈழத்தமிழ் மக்களுக்கான மனிதநேயப் புரட்சி, இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான தொடர்பாடல் இணைவுகள், ஈழத்தமிழினத்தின் மீதான 2009ம் ஆண்டு நிகழ்ந்த மனிதகுல நிந்தனைக்கு உத்தேச தமிழ் நீதி ஆயத்தின் தீர்ப்பு ஆகிய தலைப்புகளில் அமைந்த 16 கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும்.