ச.கா.ச.நாதன். (இயற்பெயர்: ச.கா.சண்முகநாதன்). கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 2வது பதிப்பு, 2006, 1வது பதிப்பு, டிசம்பர் 1994. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டர்ஸ், 70/7 கனால் வீதி, ஹெந்தளை).
96 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ.
சர்வதேச அரசியல் கற்கைநெறி, சர்வதேச அரசியல் அமைப்பு, தேசிய நலனும் பாதுகாப்பும், அதிகார அரசியல், வலுச் சமநிலையும் கூட்டுப் பாதுகாப்பும், சர்வதேசச் சட்டங்கள், தொடர்பாடலும் இராஜதந்திரமும், சர்வதேச அமைப்புக்கள், சர்வதேச இரு துருவ அரசியலும் அணிசேராக் கொள்கையும், தென்னாசிய பிராந்திய ஒத்துழைப்பு நிறுவனம் (சார்க்), சோவியத் மறைவும் சர்வதேச அரசியல் பொருண்மிய மாற்றங்களும் ஆகிய 11 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கலாநிதி ச.கா.சண்முகநாதன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.