8270 கல்வியியற் சிந்தனைகள்.

ப.சந்திரசேகரம். கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park,  2வது பதிப்பு, 2012, முதற்பதிப்பு விபரமில்லை. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).

viii, 116 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-685-007-9.

இந்நூலில் பேராசிரியரின் கல்வியியற் சிந்தனைகள் 19 தலைப்புகளில் வழங்கப்பட்டுள்ளன.  இராமகிருஷ்ண வேதாந்தக் கல்வி மரபு, விபுலாநந்தரின் பல்கலைக்கழகக் கல்விச் சிந்தனைகள், ஞானி தோல்ஸ்தோயின் கல்வி முறை, மொந்தொஸோரி அம்மையாரின் கல்விச் சிந்தனைகள், குழந்தைக் கல்வி நெறியாளர் பெஸ்டலோசி, பிரெட்டிக் புரொபல் தரும் குழந்தைக் கல்வி நெறி, ஜோன் அமோஸ் கொமெனியஸ் அளித்த கல்வி அனைத்தறிவுக் கொள்கை, கிறிஸ்தவக் கல்வி மரபு, இஸ்லாமியக் கல்வி மரபு, முன்பள்ளிக்கூட நிலைக் கல்வித் தத்துவம், காந்திக் கிராமக் கிராமியப் பல்கலைக்கழகம், கல்வியும் மெய்யியலும், கல்விஇயலில் அறநோக்கச் சிந்தனை, பள்ளிக்கூடச் சமூகமும் அதன் பணிகளும்,  பண்பாட்டுக் கல்வி, சமகால உலகம் வேண்டிநிற்கும் கல்விநெறியும் கல்வி முறையும்,  பிரெஞ்சு நாட்டின் கல்விச் செயற்பாடுகள், ஆசிரியத்துவ உளமாட்சி, மாற்றுவகைக் கல்வித் தத்துவங்கள் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. மட்டக்களப்பு, மண்டூரைச் சேர்ந்த பேராசிரியர் பத்தக்குட்டி சந்திரசேகரம் (17.7.1926-12.11.1987) பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வித் தத்துவத்தை தமிழ் மொழிமூலம் கற்பித்த முன்னோடிப் புலமையாளர். கல்வித் தத்துவத்தை உயர்நிலையில் எடுத்துரைப்பதற்குரிய  வலுவான  மொழிக் கட்டமைப்பை தமிழில் உருவாக்கியவர். ஆசியாவின் நவீன மெய்யியல் சிந்தனை மரபுகளைத் தாழ்த்தி மதிப்பீடு செய்த பிரித்தானிய பேராசிரியர் சிலரோடு இவர் முரண்பாடு கொண்டவர். நமக்கான மரபினை முன்நிறுத்தியவர்.

ஏனைய பதிவுகள்

1 Ecu Einzahlung

Content Worauf der as part of ihr Casino Auszahlung unter einsatz von PayPal achten solltet NetBet Übersicht – wie bekommt man 75 Freispiele? Lange zeit

8348 வியக்க வைக்கும் பிரபஞ்சம்.

கா.விசயரத்தினம். லண்டன்: Wijey Publication, 35, Southborough Road, Bickley, Bromley, Kent, 1வது பதிப்பு, 2013. (சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய