த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: நிலா பதிப்பகம், 70/1, வைமன் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2009. (கொழும்பு 13: சார்ளி கிராப்பிக்ஸ்).
26 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21.5×15 சமீ.
மனிதகுலத்தின் பழமையானதும் எழுதப்படாததுமான வாய்மொழி இலக்கிய வகைகளுள் விடுகதைகளும் ஒன்று. கேட்போரின் சிந்தனையைத் தூண்டி, விடைகாணும் ஆவலைத் தூண்டுவனவாக அவை அமைந்துள்ளன. சிறுவர்களின் சிந்தனையைத் தூண்டவல்ல அத்தகைய முன்னூறு விடுகதைகளும் அவற்றுக்கான விடைகளும் இந்நூலில் அடங்கியுள்ளது.