ஆர்.நடராஜா. கொழும்பு 12: லோயல் பப்ளிக்கேஷன்ஸ், 125 V, புதிய மூர் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2011. (அச்சக விபரம் தரப்படவில்லை).
iv, 112 பக்கம், விலை: ரூபா 180.00, அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-1711-33-7.
கொழும்பு, இலங்கை சட்டக்கல்லூரி விரிவுரையாளரான நூலாசிரியர் சிங்கள மொழி கற்பதற்காக எழுதிய நூல் வரிசையில் மூன்றாவது நூல். வினைச்சொற்களின் பல்வேறான திரிபுகள், எச்ச வினைகளின் பயன்பாடு, தன்மை முன்னிலை படர்க்கைப் பெயர்களின் பிரயோகங்கள், இடைச்சொற்களின் பிரயோகம், வினாச்சொல் பிரயோகம், எண்களின் பிரயோகம். உரையாடல், தெரிந்திருக்கவேண்டிய நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் நிறுவனத் தலைப்புக்கள் ஆகிய எட்டு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.