8311 தமிழ் மொழியும் யப்பானிய மொழியும் இலக்கண ஒப்புமை.

RRK ஓனோ (ஜப்பானிய மூலம்), அ.சண்முகதாஸ், மனோன்மணி சண்முகதாஸ் (தமிழாக்கம்). கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, பெப்ரவரி 1990. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி).

viii, 117 பக்கம், விலை: ரூபா 40.00, அளவு: 18.5×13 சமீ.

யப்பானிய மொழியுடன் பிறப்பியலடிப்படையிலே தொடர்புள்ள மொழிகள் எவை என்பதை அறிவதற்கு கடந்த 100 ஆண்டுகளாக மொழியியலாளர் முயன்று வந்துள்ளனர். ஜனு, கொரிய, இந்தோனேஷிய, கிரெக்க மொழிகளை யப்பானிய மொழியுடன் ஒப்பீட்டாய்வுசெய்து தோல்விகண்ட நிலையில் திராவிட மொழிகளுடனான ஒப்பீட்டாய்வில் ஓரளவு வெற்றிகண்டனர். 1856இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை  எழுதிய ரொபர்ட் கோல்ட்வெல், தமிழ்மொழிக்கும் ஜப்பானிய மொழிக்கும் இடையே ஒற்றுமையுள்ளதைக் குறிப்பிட்டிருந்தார். அதன் பின் திராவிட மொழிகளுக்குள் நீண்ட இலக்கியப் பாரம்பரியமுள்ள தமிழ்மொழியின் பால் யப்பானிய மொழியியலாளர்களின் பார்வை திரும்பியது. இதனைச் சிறப்பாகச் செய்தவர் RRK ஓனோ. ஒலியொற்றுமையும் பொருளொற்றுமையும் கொண்ட 300 தமிழ்-யப்பானியச் சொற்களை முதலில் நிரைப்படுத்தினார்.  இச்சொற்கள் பிரதிபலிக்கும் பண்பாட்டொற்றுமை பற்றியும் ஆய்வுசெய்தார். அவர் எழுதிய நிஹொங் கொ இஸென் என்ற நூல் இருமொழிகளும் கொண்டுள்ள இடைச்சொற்கள், துணைவினைகள் ஆகியன பற்றிய ஒப்பியலாய்வாக அமைந்திருந்தது. அந்நூலின்கண் உள்ள இலக்கண ஒப்புமை பற்றிக் கூறுகின்ற பகுதி இங்கு மொழிபெயர்க்கப்பட்டு தனிநூலாக வெளியிடப்பட்டுள்ளது. RRK ஓனோ (Susumu Ohno) 1919இல் பிறந்தவர். 1943இல் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் இலக்கியக் கலாநிதிப் பட்டம் பெற்றவர். டோக்கியோவில் கக்சுயின் பல்கலைக்கழகத்தில் (Gakushuin University) ஜப்பானிய மொழியியல் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார். 1983இல் இவருக்கு கோயம்புத்தூர்  தமிழ்ச்சங்கம் தமிழ்ச்சான்றோன் என்னும் பட்டம் வழங்கிக் கௌரவித்தது.

ஏனைய பதிவுகள்