த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 23, 3/3 அறத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, சித்திரை 2009. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
(2), 158 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கும், ஏனைய வகுப்புப் பரீட்சைகளுக்கும் உதவும் வகையில் உருவாக்கப்பெற்ற நூல். இந்நூலில் ஒத்த கருத்துச் சொற்கள், எதிர்க் கருத்துச் சொற்கள், எதிர்ப்பாற் சொற்கள், ஒரு பொருள் பன்மொழி, பலபொருள் ஒரு மொழி, இரட்டைக் கிளவி, இணைமொழி, அடுக்குத் தொடர்கள், மரபுத் தொடர்கள், உவமைத் தொடர்கள், பெயராகவும் வினையாகவும் வரும் சொற்கள், தொடர்மொழிக்கு ஒரு மொழி, பழமொழிகள், தூய தமிழ்ச் சொற்கள், விடுகதைகள் (விடைகளுடன்) ஆகியஅனைத்தும் அடங்கியுள்ளன. முன்னாள் கல்விப் பணிப்பாளரான ஆசிரியர் பல்வேறு தமிழ் பாடநூல்களையும் சிறுவர் இலக்கியங்களையும் படைத்தவராவார்.