த.துரைசிங்கம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஜுலை 2010. (கொழும்பு 12: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
iv, 82 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 22×15 சமீ.
2009ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் க.பொ.த. உயர்தர வகுப்புக்குரிய (தரம் 12, 13), தமிழ்ப் பாடத்திட்டத்திற்கமைவான கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் இது. கட்டுரை ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள், கட்டுரைகள், தமிழ் உரைநடை வளர்ச்சிப் பாங்கு, மாதிரி வினாக்கள், பின்னிணைப்பு என்பவற்றை 15 அத்தியாயங்களில் இந்நூல் உள்ளடக்கியுள்ளது. முன்னாள் கல்விப் பணிப்பாளரான ஆசிரியர் பல்வேறு தமிழ் பாடநூல்களையும் சிறுவர் இலக்கியங்களையும் படைத்தவர்.