8333 தமிழ் (தரம் 12,13).

செ.திருநாவுக்கரசு. யாழ்ப்பாணம்: திருமதி விஜயலட்சுமி திருநாவுக்கரசு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (யாழ்ப்பாணம்: கஜமுகன் பதிப்பகம், நல்லூர்).

x, 755 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52960-0-7.

தமிழ் (தரம் 12,13).

செ.திருநாவுக்கரசு. யாழ்ப்பாணம்: திருமதி விஜயலட்சுமி திருநாவுக்கரசு, 2வது பதிப்பு, ஆகஸ்ட் 2011, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2010. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், 676 பருத்தித்துறை வீதி, நல்லூர்).

xvi, 828 பக்கம், விலை: ரூபா 1250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52960-0-7.

தமிழ்மொழியின்  தேர்ந்த இலக்கிய ஆக்கங்கள் சிலவற்றை இலங்கைப் பாடசாலைகளின் க.பொ.த. உயர்தர வகுப்பின் தமிழ்ப்பாடக் கலைத்திட்டத்திற்கு ஏற்றதாகத் தொகுத்துத்தரும் முயற்சி இதுவாகும். சங்ககாலப் பாடல்கள் (குறுந்தொகை, புறநானூறு, நற்றிணை),  திருக்குறள் (1-10 அதிகாரங்கள்), சிலப்பதிகாரம்,  மணிமேகலை, சுந்தரர் தேவாரம், பெரியாழ்வார் திருமொழி, கம்பராமாயணம் (1-115 பாடல்கள்), தேம்பாவணி, சீறாப்புராணம், தனிப்பாடல் திரட்டு, பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், உமர் கய்யாம் பாடல்கள் (ச.து.சுப்பிரமணிய யோகியார், அப்துல் காதர் லெப்பை, கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை ஆகியோரின் மொழிபெயர்ப்புகள்), கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை பாடல் (சூரியகாந்தி), கம்பதாசன், ந.பிச்சமூர்த்தி, மஹாகவி, நீலாவணன், புரட்சிக்கமால், முருகையன், சுபத்திரன், குறிஞ்சித் தென்னவன் ஆகியோரின் கவிதைகள், க.கணபதிப்பிள்ளை, சி.கணபதிப்பிள்ளை, ஏ.ஜே.கனகரட்னா, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், சுவாமி விபுலானந்தர் ஆகியோரின் கட்டுரைகள், புதுமைப்பித்தன், செ.கதிர்காமநாதன், ஜெயகாந்தன், வ.அ.இராசரத்தினம், என்.எஸ்.எம். இராமையா, மருதூர்க் கொத்தன் ஆகியோரின் கதைகள், செ.கணேசலிங்கனின் நீண்ட பயணம் நாவல், ஆகிய விடயங்கள் 25 தலைப்புகளில் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்