செங்கை ஆழியான் (இயற்பெயர்: க.குணராசா). யாழ்ப்பாணம்: க.குணராசா, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், காங்கேசன்துறை வீதி).
82 பக்கம், விலை: ரூபா 6.00, அளவு: 21.5×14 சமீ.
அறிவியல் நூல் வரிசையில் முதலாவது வெளியீடு. சூரியன் பற்றிய விரிந்துவரும் அறிவியல் உண்மைகளை இளையோருக்குப் புரியும் வகையில் எளிமைப்படுத்தி இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் உதவி விரிவுரையாளராகவும், கொக்குவில் இந்துக் கல்லூரியின் புவியியல் ஆசிரியராகவும், கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியின் பகுதிநேர விரிவுரையாளராகவும், கொழும்புத்துறை ஆசிரிய கலாசாலையின் அதிதிப் போதனாசிரியராகவும், புவியியல் சஞ்சிகைளின் ஆலோசக ஆசிரியராகவும் பணியாற்றிய வகையில் புவியியல்துறையில் பரந்த அனுபவம் மிக்கவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84851).