கா.விசயரத்தினம். லண்டன்: Wijey Publication, 35, Southborough Road, Bickley, Bromley, Kent, 1வது பதிப்பு, 2013. (சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர்;).
xvi, 120 பக்கம், விளக்கப்படங்கள், விலை: இந்திய ரூபா 70., அளவு: 21×14 சமீ., ISBN: 978-0-9575862-0-8.
பிரபஞ்சம் என்னும் பெருவெளியுலகத்தில் விளங்கும் சூரியன் முதலான விண்மீன்களைப் பற்றியும், கோள்கள், பால்வெளிப்பாதை, கருங்குழித் திரட்டு என்பதான பல்வேறு அறிவியல் விளக்கங்களையும் ஒருசேரத் தேடித் தொகுத்து இந்நூலில் வழங்கியிருக்கிறார். கதிரவன் மண்டலம் (சோலர் சிஸ்டம்)அன்றும் இன்றும், பிரபஞ்சம் (யுனிவேர்ஸ்), விண்மீன்கள் (ஸ்டார்ஸ்), சூரியன் (சன்), நிலாக்கள் (மூன்), புதன் கோள் (மேர்க்குரி), சுக்கிரக்கோள் (வீனஸ்), பூமிக் கோள் (ஏர்த்), செவ்வாய்க் கோள் (மார்ஸ்), வியாழக்கோள் (ஜூப்பிட்டர்), சனிக்கோள் (சட்டர்ன்), விண்மக்கோள் (யுறெனஸ்), சேண்மக்கோள் (நெப்டியூன்), சேணாகக் கோள் (புளுட்டோ), பிரபஞ்சத்துக்கு அப்பால், வான் கங்கை (கலக்சி), நான்கு வேறுபட்ட சூரியன்களின் ஒளிபெற்றுப் பவனிவரும் ஒரு புதிய கோள், உசாத்துணை நூல்கள் என 18 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் நுணாவிலூர் கா.விசயரத்தினம், யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.