இராஜசேகரம். (இயற்பெயர்: கந்தசாமி பாலசுப்பிரமணியம்). கொழும்பு 4: சனாதன தர்ம யுவ விழிப்புணர்ச்சிக் கழகம், இல.3, ரிட்ஜ்வே ஒழுங்கை, 1வது பதிப்பு 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).
xii, 72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0547-00-5.
பல்லவராசசேகரன், இராஜசேகரம் ஆகிய புனைபெயர்களிலும் எழுதிவரும் திரு. கந்தசாமி பாலசுப்பிரமணியம் இலங்கை தமிழ் மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் தவிசாளரும், ஆராய்ச்சியாளருமாவார். தமிழ்ப் பிரதேசத்தில் சித்தா சுகாதார சேவையை 1987இல் தாபித்து 1996வரை அதனை நடத்திவந்தார். சிங்கை மன்னர் பரம்பரையில் தோன்றிய இராசசிம்மனின் வழித்தோன்றலாகிய நூலாசிரியர் இராசசேகரம் என்ற மூலிகை மருத்துவ நூலை 1984இலும், குலசேகரம் என்ற விஷக்கடி மருத்துவ நூலை 1985இலும் எழுதி வெளியிட்டவர். தமிழர் சுகாதாரம் (1986), பறாளை விநாயகர் தல வரலாறு (1994), முத்தூர் அகத்தியர் (2002), இராவணேசவரன் இந்திர உலா (2004), பல்லவராச்சியம் (2007) ஆகிய நூல்களையும் தொடர்ந்து வெளியிட்டவர். சிங்கை அரசர்களின் அறுவை மருத்துவம் பற்றிக் கூறும் இந்நூல் மருத்துவம், இராக்கத மருத்துவம், வன்ம விதி, அறுவை மருத்துவம், சத்தக விதி, சுட்டிகை விதி, சிரைவிதி, அட்டைவிதி, காயகற்பம் ஆகிய ஒன்பது அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது.