ஸ்ரீ இராமநாதன் கலைவாணன் (புனைபெயர்: கண்ணன்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2008. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).
xvi, 172 பக்கம், விலை: இந்திய ரூபா 55., அளவு: 18×12.5 சமீ.
மட்டக்களப்பு சீலாமுனையைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீ இராமநாதன் கலைவாணன் சித்த வைத்தியப் பரம்பரையில் தோன்றியவர். இவரது பாட்டனார் கதிரவேலியார் பிரசித்திபெற்ற மருத்துவராவார். மட்டக்களப்பு மாவட்ட சித்த மருத்துவச் சங்க நிர்வாகசபை உறுப்பினராகவும், ஆயுர்வேத வைத்திய பாதுகாப்புச் சபைத் தலைவராகவும், மட்டக்களப்பு-புதுக்குடியிருப்பு அரச ஆயுர்வேத வைத்தியசாலையின் விசேட வைத்தியராகவும் பணியாற்றுகிறார். இந்நூலில் இந்துமதமும் சித்த மருத்துவமும்/சோதிடமும் சித்த மருத்துவமும்/நவக்கிரகங்களும் நவமணிகளும்/ மருந்தாகும் நீர்/ மணிக்கடை நூல்/வைத்தியரை அழைக்க வருபவன்/தேகத்தின் உள்ளுறுப்புகளுக்குப் பலம்/மூலிகைகளின் செயற்பாடுகள்/தூக்க மாத்திரை பாவித்தல் நல்லதா/ சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்/ சித்த மருத்துவத்தில் பித்த வாயு/ சித்த மருத்துவத்தில் குருதி அனல்வாதம்/ சித்த மருத்துவத்தில் ஒற்றைத் தலைவலி/சித்த மருத்துவத்தில் ஒவ்வாமை/ சித்த மருத்துவத்தில் கீல்வாதம்/ சித்த மருத்துவத்தில் தலைவலி/ சித்த மருத்துவத்தில் பெரும்பாடு (வெட்டை)/ சித்த மருத்துவத்தில் இரத்த சோகை/சித்த மருத்துவத்தில் மூலரோகம்/சித்த மருத்துவத்தில் மாரடைப்பு/ மனநலனும் மனநோயும்/சித்த மருத்துவத்தில் உடற்பருமன்/ சித்த மருத்துவத்தில் காசநோய்/ சித்த மருத்துவத்தில் மேகநோய்/ சித்த மருத்துவத்தில் மலச்சிக்கல்/சித்த மருத்துவத்தில்அஜீரணம்/சித்த மருத்துவத்தில் சூலைநோய்/ சித்த மருத்துவத்தில் மஞ்சள் காமாலை ஆகிய 28 விடயத் தலைப்புகளில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.