தமீமா றஹீம். கல்கிஸ்சை: கலாபூஷணம் திருமதி தமீமா றஹீம், 14 V, சிறி தர்மபால வீதி, 1வது பதிப்பு, 2011. (தெகிவளை: ஏ.ஜே.பிரிண்ட்ஸ், 44 ஸ்டேஷன் வீதி).
58 பக்கம், தகடுகள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ.
ஆசிரியரின் நான்காவது வெளியீடு இச்சமையல் குறிப்புப் புத்தகம் வெளிவந்துள்ளது. தான் அண்மையில் லண்டன் சென்றவேளையில் அங்கு சமையலறைகளில் கண்டு அவதானித்ததும், குறைந்த அளவில் எண்ணெய் பயன்படுத்தப்பட்டு, பெருமளவில் பேக் பண்ணப்பட்டதுமான 76 வகையான உணவுப்பதார்த்தங்களை தயாரிக்கும் முறைகள் இந்நூலில் காணப்படுகின்றன.ஐஸ்கிரீம் வகைகள், ஜுஸ் வகைகள், கேக் வகைகள், உருளைக்கிழங்கு வறுவல் (கிரிப்ஸ்), கெபாப் வகைகள், கறிவகைகள் என இவரது சமையல் குறிப்புகள் விரிந்து பரந்துள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 229333).