8383 பண்ணிசை வரலாற்றுத் தத்துவம்.

எஸ்.கே.சிவபாலன். சென்னை 113: சுத்தானந்தா பதிப்பகம், ஸ்ரீராம் நகர், 1வது பதிப்பு, பெப்ரவரி 1983. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(14), 88 பக்கம், புகைப்படம், விலை: இந்திய ரூபா 9., அளவு: 19×13 சமீ.

தெய்வநலம் மிக்க தீஞ்சுவைப் பனுவலாகிய தெய்வீPகத் திருமுறைகள் வேண்டியன  வேண்டியாங்கு கொடுக்கும் சக்திவாய்ந்த சிவசொரூப மந்திரங்களாகும். மேடம் முதல் மீனம் வரை உள்ள  பன்னிரண்டு இராசிகள் சூரியனின் சக்தியைப் பிரதிபலிப்பது போல், பன்னிரு திருமுறைகளும் இறைவனின் சக்தியைப் பிரதிபலிக்கும் சிவசொரூபமாகும்.  இவ்வகைச் சிறப்புமிக்க திருநெறித் தமிழை சமய குரவர் மூவரும் அருளும்போது  அவை பண்ணிசை வடிவங்களாக வெளிவந்தன. இந்நூல் பண்ணிசையின் வரலாறுபற்றிக் கூறுகின்றது.  யாழ்ப்பாணம், சித்தன்கேணியைச் சேர்ந்த எஸ்.கே.சிவபாலன் சென்னை அரசு இசைக் கல்லூரியின் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். யாழ். திருஞானசம்பந்தர் ஆதீனம் திருமுறைக் கலாநிதி என்ற பட்டத்தையும், அகில இலங்கை இந்து மாமன்றம் (கொழும்பு) பண்ணிசை மணி என்ற பட்டத்தையும், காஞ்சிபுரம் மெய்கண்டார் ஆதினம் திருமுறைச் செல்வமணி என்ற பட்டத்தையும் இவருக்கு வழங்கிச் சிறப்பித்திருந்தன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  85509).

ஏனைய பதிவுகள்

11355 ஆசிரியம்: தூண்டி -1, துலங்கல் -1: 1995.

பெ.பிரான்சிஸ் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: பட்டப்பின் கல்வி டிப்ளோமா மாணவர் அமைப்பு, தேசிய கல்வி நிறுவகம், யா/இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 1995. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்). (18+6), 56 பக்கம்,

Пинко Казино Официальный сайт Pinco Casino

Содержимое Пинко Казино – Ваш путь к незабываемым впечатлениям Игры от ведущих разработчиков Бонусы и акции для новых и постоянных игроков Безопасность и надежность ваших

12733 – ஆங்கில இலக்கிய வரலாறு.

எஸ்.ஜெபநேசன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiv, 125 பக்கம், விலை: ரூபா