ஞானா குலேந்திரன்.கொழும்பு: கொழும்புச் சிவத்திருமன்றம், 1வது பதிப்பு, செப்டம்பர் 2008. (கொழும்பு 6: டெக்னோ பிரின்டர்ஸ், 55, டொக்டர் ஈ.ஏ.குரே மாவத்தை).
xvi, 112 பக்கம், தகடு, விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ.
தெய்வத் தமிழிசையின் தாய், தேவாரப் பண்களின் இசை, யாழ் முரிப் பண்ணிசை, தேவாரம் பாடும் முறை, திருவாசக இசை, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு இசை என்னும் ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. தமிழிசையின் பாரம்பரிய வளர்ச்சியை முதன்மைப்படுத்தி, பண்ணிசையில் எப்படி ஒவ்வொரு பண்ணுக்கும் இராகம், தாளம், அமையவேண்டும் என்பதன் பூரண விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் பேராசிரியர் ஞானா குலேந்திரன் யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் ஆசிரியராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும், தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக நுண்கலை ஆராய்ச்சித்துறை பேராசிரியராகவும், புதுடில்லிப் பல்கலைக்கழக மானியக்குழு பெருந்திட்ட முதன்மை ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 218574).