பாலசுகுமார். மட்டக்களப்பு: அனாமிக்கா பதிப்பகம், 48, பெய்லி 1வது குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).
40 பக்கம், வண்ணப் புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 200., அளவு: 17×22.5 சமீ.
இந்நூல் ஈழத்துக் கூத்து மீளுருவாக்கத்தை முதன்மைப்படுத்துகின்றது. பேராசிரியர் வித்தியானந்தன் தொடக்கம் இன்று வரை நீளும் ஒரு நெடும்பயணத்தின் தடயங்கள் இந்நூலில் முன்னிலைப் படுத்தப்படுகின்றது . நம் எதிர்கால சந்ததியினர் தம் அடையாளங்களை உறுதிப்படுத்திக்கொள்ள ஈழநாட்டியம் புதிய செய்திகளை அவர்களுக்குத் தருகின்றது. ஒவ்வொரு இனமும், சமூகமும் தமக்கான கலை அடையாளங்களைத் தேடுவதும், அதனைக் கண்டுபிடிப்பதும், மீளுருவாக்கம் செய்வதும் காலத்தின் தேவை. அதன் அடிப்படையில் ஈழநாட்டியம் ஈழத்தமிழர் சமூகத்தின் நடனமாக இங்கே முன்மொழியப்படுகின்றது.