8386 ஆடற்கலை.

லீலாம்பிகை செல்வராஜா. கொழும்பு 3: லீலாம்பிகை செல்வராஜா, இல. 43, அரச தொடர் மாடி, புனித அந்தோனியார் மாவத்தை, கொள்ளுப்பிட்டி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (கொழும்பு 13: கௌரி பிரிண்டர்ஸ்,  இல.207, சேர். ரட்ணஜோதி சரவணமுத்து மாவத்தை, ஆட்டுப்பட்டித்தெரு).

284  பக்கம், விலை: ரூபா 750., அளவு: 24.5×19 சமீ., ISBN: 978-955-97350-2-1.

இந்நூல் மரபுவழிவந்த பரதம், ஆனந்தக் கூத்தனின் அற்புதத் தாண்டவம், நடனம், குறவஞ்சி நாடகம், யகஷகான, தஷவித நாடகங்கள், தமிழகத்துத் தெருக்கூத்து, இலங்கைவாழ் தமிழர்தம் கூத்து மரபு, இசைக் கருவிகள், பரதக் கலையில் லயக் கருவிகளின் பங்களிப்பு, பரதநாட்டியத்திற்கு உயிரூட்டும் குழல், பரதநாட்டியத்திற்கு அணிசேர்க்கும் வீணை, பரதக் கலையில் வயலின், தம்புரா, கிளாரினெட் முகவீணை சப்பளாக்கட்டை, தவில் நாதஸ்வரம் ஆகிய தலைப்புகளில் 16 அத்தியாயங்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியை லீலாம்பிகை செல்வராஜா இலங்கையின் முன்னணி நாட்டியக் கலைஞர்களுள் ஒருவர். சென்னை அடையாறு கலாஷேத்திராவில் திருமதி ருக்மிணிதேவி அருண்டேலிடம் ஐந்தாண்டுகள் பரதம் பயின்றவர். கலைக்கோயில் நடனப்பள்ளி இயக்குநராகவும், நடன ஆசிரியராகவும், யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட வருகைதரு விரிவுரையாளராகவும், யாழ். கல்வித்திணைக்கள நடனத்துறை ஆலோசகராகவும்  பல நிலைகளில் பரத நாட்டியக் கலைக்குப் பணியாற்றியவர். பிரதேச அபிவிருத்தி அமைச்சின் நூபுர லயநிதி என்னும் விருதினை 1987ம் ஆண்டும் இலங்கை கலாச்சார பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம்  வழங்கிய கலாபூஷண விருதினை 1997இலும் பெற்றவர். 2003இல் கலாசார அலுவல்கள் அமைச்சும் ஸ்ரீலங்கா கலைக்கழகமும் இணைந்து நடத்திய அரச இசை நடன விழாவில் பரத நாட்டியத்துறைக்கான கலாரத்னா விருது வழங்கப்பெற்று இவர் கௌரவிக்கப்பட்டார்.

ஏனைய பதிவுகள்

Are Publication From Ra Magic Slot

Content Casino Thumb Online game Evaluation And you will Bottom line Guide Away from Ra Luxury On line Comment, Free Gamble and you can Private