8392 களம் தந்த களங்கம்: குருநகர் கலைமாட்சி. கலையார்வன்.

(இயற்பெயர்: கு.இராயப்பு).  யாழ்ப்பாணம்: Neo Cultural Council, 28/1, சென் ஜேம்ஸ் மேற்கு வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2003. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், பிரதான வீதி).

xiv, 114 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ.

இந்நூல் இரு விடயங்களை உள்ளடக்கியது. களம் தந்த களங்கம் என்ற தென்மோடி நாட்டுக்கூத்து முதலாவதாக இடம்பெறுகின்றது. அமரர் சாந்தியோகு என்பவரால் 1856இல் எழுதி மேடையேற்றப்பட்ட சந்தியோகுமையோர் படைவெட்டு என்ற கூத்தினை அடியொற்றி பின்னாளில் ஜேம்ஸ் அவர்களால் 1972இல் படைவெட்டு என்ற கூத்து மேடையேற்றப்பட்டது. படைவெட்டுக் கதையின் ஆரம்ப நிகழ்வுகளில் சில மாற்றங்களைப் புகுத்தி களம் தந்த களங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. துருக்கிய மன்னன் வாகைமேரோனுக்கும் அமைதிவிரும்பும் ஸ்பானிய மன்னன் தொம் ரெம்மில் என்பவனுக்கும் இடையில் பெண் திறை தொடர்பாக எழுந்த பிணக்கினால் மூண்ட யுத்தத்தில் தொம் ரெம்மில் வணங்கும் புனித யாகப்பர் உதவிபுரிந்து தொம் ரெம்மிலுக்கு வெற்றியைப் பெற்றுத்தருவதாகக் கதை அமைகின்றது. இரண்டாவதாக இந்நூலில் இடம்பெறுவது குருநகர் கலைமாட்சி என்ற கட்டுரையாகும். இதில் குருநகர் பிரதேசத்தின் கலை, இலக்கிய, நாடக, நாட்டுக்கூத்து பற்றிய முக்கிய தரவுகள் சேகரித்துத் தரப்பட்டுள்ளன. வெளியீடு கண்ட நூல்கள், மலர்கள் மற்றும் பிற இலக்கியங்கள், அம்மண்ணில் அமைந்திருந்த மன்றங்கள், வாழ்ந்திருந்த நாடக எழுத்தாளர்கள், இசைக் கலைஞர்கள், அண்ணாவிகள், அம்மண்ணின் நாட்டுக்கூத்துச் சிறப்பு, எழுதப்பட்ட கூத்துக்கள் என பல்வேறு தகவல்கள் ஒன்பது அத்தியாயங்களில் தொகுத்துத்தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்