அந்தனி ஜீவா. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 110 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-388-4.
வீரகேசரியில் சங்கமம் பகுதியில் தொடராக எழுதப்பட்டுவந்த ஆசிரியரின் கட்டுரைத் தொடர் நூலுருவில் வெளிவந்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையின் நாடகத்துறையில் தீவிர ஈடுபாட்டாளராகப் பணியாற்றியவர் அந்தனி ஜீவா. தலைநகரில் தமிழ் நாடகக் கலைக்கு உயிரூட்டிய நாடகக் கலைஞர்களின் விபரங்கள், அவர்களின் சாதனைகள் புகைப்படங்களுடன் 31 கட்டுரைகளில் இங்கு பதிவுசெய்தள்ளார். ஈழத்துக்கலைஞர்கள் மட்டுமல்லாது, தமிழகத்திலிருந்து இங்குவந்து நாடகக்கலையின் நுட்பங்களை அறிமுகம் செய்த சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், சுந்தராம்பாள், கிட்டப்பா, பீ.யூ.சின்னப்பா, ஒளவை டி.கே.சண்முகம், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், மதுரம் போன்றோர் பற்றியும் குறிப்பிடுகின்றார். நாடக உலகில் பெண்கள் என்ற பகுதியில் விசாலாட்சி ஹமீத், ஹெலன் குமாரி போன்றோரையும், புலம்பெயர்ந்துவாழும் அ.தாசீசியஸ், கே.பாலேந்திரா, மாவை நித்தியானந்தன் போன்றோரைப்பற்றியும் பதிவுசெய்துள்ளார்.