8395 பரிகாரக் கற்பித்தலுக்கான அரங்கச் செயற்பாடு.

முத்து இராதாகிருஷ்ணன். திருக்கோணமலை: மதுஷா வெளியீடு, 164/1, திருஞானசம்பந்தர் வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2008. (திருக்கோணமலை: அஸ்ட்ரா அச்சகம்).

76 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 205.00, அளவு: 20×14.5 சமீ.

வடமாகாணக் கல்வித் திணைக்களத்தில் மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளராகத் தற்போது  கடமையாற்றும் முத்துக்குமாரு இராதாகிருஷ்ணன் ஈழத்து இலக்கியச் சூழலில் கல்வியியலாளராகவும், நவீன ஓவியராகவும், அரங்கியலாளராகவும், ஆக்க இலக்கியப் படைப்பாளியாகவும் நன்கு அறியப்பட்டவர். சிறுவர் அரங்கச் செயற்பாடுகளில் தீவிர ஈடுபாடுகொண்ட இவரது கல்வியியல்சார் அரங்கச் செயற்பாடு தொடர்பான நூல் இதுவாகும். அறிமுகம், செயலூக்கமுள்ள வகுப்பறை, நடைமுறையில் இன்றைய ஆரம்பக்கல்வி, உயிர்ப்பான வகுப்பறை நிலைமை, சிறுவர் அரங்கு ஒரு கற்றல் நுட்பமாக, பிள்ளையின் இடர்களை அறிவோம், அரங்கச் செயற்பாடுகளின் வலிமையினை அறிவோம், அரங்கச் செயற்பாடுகளின் ஊடாக மாணவர் அடையும் தேர்ச்சிகள், அரங்க விளையாட்டுக்கள் (உடலசைவுச் செயற்பாடுகள், அரங்க விளையாட்டுக்கள்), வகுப்பறை மட்ட அரங்கச் செயற்பாடுகள், சிறுவர் உள ஆற்றுப்படுத்தல் அரங்கச் செயற்பாடுகள், சிறார்களுக்கான சித்திரமும் சுதந்திரமான கற்றலும், நிறைவு ஆகிய 13 தலைப்புகளின் கீழ் விரியும் இந்நூல் பரிகாரக் கற்பித்தலுக்கான (Remedial Education) அரங்கச் செயற்பாடுகளை எளிமையாக விபரிக்கின்றது.

ஏனைய பதிவுகள்