8396 மஹாகவி காளிதாஸரின் அபிக்ஞான சாகுந்தலம்: நாடகபாடமும் ஆற்றுகைக் குறிப்புகளும்.

நவதர்ஷனி கருணாகரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 148 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-375-4.

காளிதாசரின் சாகுந்தலம் தமிழில் நாட்டிய நாடகங்களாகவும், இயற்பண்புசார் அரங்க வெளிப்பாடுகளாகவும் பிரயோக அரங்குசார் செயற்பாடுகளாகவும் பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  எனினும் தமிழ்மொழியாக்கங்களின் மொழிநடை சமகாலத்தில் அரங்கத் தயாரிப்பாகத் தொடரப்படுவதில் வரையறைகளைக் கொண்டுள்ளது.  எனவே தான் இந்நூலில் இடம்பெறும் மகாகவி காளிதாசரின் அபிக்ஞான சாகுந்தலம் சமகாலத்துப் பார்வையாளர்களுடன் தொடர்பாடக்கூடிய மொழிநடையில் தொகுக்கப்பட்டுள்ளது. சுத்தானந்த பாரதி (1939), மறைமலையடிகள் (1940), சந்தானம் (1953), நவாலியூர் சோ.நடராஜன் (1967) ஆகியோரது தமிழ்மொழியாக்கங்களிலிருந்து தொகுக்கப்பட்டதே  இந்த அபிக்ஞான சாகுந்தலமாகும். இரு பகுதிகளில் விரியும் இந்நூலின் முதற் பகுதியில் அறிமுகம், நாடகபாடங்களின் தொகுப்பு, சமஸ்கிருத நாடகபாடங்களின் அமைப்பாக்கம், அரங்கக் கட்டடத்தின் அமைப்பு, அபிநயம், ஆற்றுகை, ரஸானுபவம், தயாரிப்புப் படிமுறை, நாடகபாடத்துடன் ஆழமான பரீச்சயத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கான பயிற்சிகள், ஆகிய ஒன்பது இயல்களும், இரண்டாம் பகுதியில் அபிக்ஞான சாகுந்தலம்- தொகுக்கப்பட்ட நாடக பாடப்பிரதியும், பின்னிணைப்பில் நாடக மேடையேற்றப் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. நவதர்ஷனி கருணாகரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கக் கலைகளும் துறையில் சிறப்புக் கலைமாணிப்பட்டத்தினையும் சென்னைப்பல்கலைக்கழகத்தில் முதுமாணிப்பட்டத்தினையும் இங்கிலாந்திலுள்ள யுசுவுவுளு ஐவெநசயெவழையெட நிறுவனத்தில் அரங்கத் தயாரிப்புத்துறையில் டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் நுண்கலைத்துறையில் நாடகமும் அரங்கக் கலைகளும் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

ஏனைய பதிவுகள்

11291 நேர்கொண்ட பாவை.

கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக்கள வெளியீடு, 1வது பதிப்பு, ஜுலை 2015. (இணுவில்: அம்மா அச்சகம்). xiv, 236 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-51147-7-9.

10660 மாருதப் பிரவல்லி.

சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்). தெல்லிப்பழை: மாவைக் கந்தசுவாமி தேவஸ்தானம், மாவிட்டபுரம், 1வது பதிப்பு, ஜுன் 1990. (நல்லூர்: திருவள்ளுவர் அச்சகம், யாழ்ப்பாணம்: ஸ்ரீசுப்பிரமணிய அச்சகம்). xxiv, 66 பக்கம், விலை: ரூபா 30., அளவு: