8410 ஈழத்து சிறுவர் அறிவியல் பாடல்கள்.

செ.யோகராஜா (தொகுப்பாசிரியர்). வாழைச்சேனை: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், கோறளைப் பற்று, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (மட்டக்களப்பு: ஏ.ஈ.ரெக்  மறுதோன்றி அச்சகம், 28, பார் வீதி, செலான் வங்கி அருகாமை).

viii, 32 பக்கம், விலை:  ரூபா 50., அளவு: 19.5×14.5 சமீ.

சிறுவர் தினச் சிறப்பு வெளியீடாக 1.10.2003இல் வெளியிடப்பட்ட நூல். ஈழத்தில் இதுவரை வெளிவந்த பல சிறுவர் பாடல் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் இவை. அறிவியல் விளக்கம், அறிவியல் கண்டுபிடிப்பு, விஞ்ஞானி, சூழலியல், புவியியல், சுகாதாரம், கணிதம் ஆகிய விடயங்களில் எழுதப்பட்ட 28 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மஹாகவி, வளவைவளவன், ச.அருளானந்தம், மனோ பற்குணம், மாவை வரோதயன், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், தில்லைச் சிவன், பா.அமிர்தநாயகம், க.வீ, மு.பொன்னம்பலம், வ.இராசையா, ஆடலிறை, வாகரைவாணன், த.துரைசிங்கம், திமிலை மகாலிங்கம், வெற்றிவேல் விநாயகமூர்த்தி, மருதமைந்தன் ஆகியோர் எழுதிய பாடல்கள் இவை.

ஏனைய பதிவுகள்

17759 கடைசிக் கட்டில்.

குணா கவியழகன். தமிழ்நாடு: எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 642 002, 1வது பதிப்பு, ஜனவரி 2024. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 232 பக்கம், விலை: இந்திய ரூபா

15615 வற்றாத ஈரம்.

சித்தி றபீக்கா பாயிஸ். சம்மாந்துறை: தேசிய கலை இலக்கியத் தேனகம், திறனொலி கலை கலாசார ஊடக வலையமைப்பு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2019. (சாய்ந்தமருது: எக்செலன்ட் பிரின்ட்). (4), 5-87 பக்கம், விலை: ரூபா