8413 தங்கமீன் குஞ்சுகள்: சிறுவர் இலக்கியம்.

கிண்ணியா எஸ்.பாயிஸா அலி. திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  ஜுன் 2010. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).

viii, 42 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52535-8-1.

திருமதி எஸ்.பாயிஸா அலி கிண்ணியா பிரதேசத்தின் குறிஞ்சாக்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்ட பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர். சிகரம் தொட வா என்ற தனது முதலாவது பாடல் தொகுப்பு நூலுடன் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர்.  தங்கமீன் குஞ்சுகள் சிறுவர்களுக்கான பாடல்களைக் கொண்டது. அனைத்துயிர்களையும் அரவணைத்து இன மத பேதங்களைக் கடந்து அன்பு அறம் கருணை என்னும் மானுட உயர்குணங்களைக் கைக்கொள்ள விடுக்கும் அறைகூவல்களாக இக்கவிதைகள் அமைந்துள்ளன. 

ஏனைய பதிவுகள்