ஆ.சி.நடராஜா. உரும்பிராய்: வெற்றிமணி வெளியீடு, தபால்பெட்டி ஒழுங்கை, பலாலி வீதி, 2வது பதிப்பு, டிசம்பர் 2011, 1வது பதிப்பு, ஜுலை 2007. (கோண்டாவில்: அன்ரா டிஜிட்டல் பிரிண்டர்ஸ்).
(6), 21 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18.5 சமீ.
இந்நூலாசிரியர், தினக்குரல் பத்திரிகை நிறுவனத்தின் பொது முகாமையாளராகவும், வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் முள்ளாள் அதிபராகவும் இருந்தவர். இசையுடன் பாடத்தக்கதாக அவர் இயற்றிய நடராஜா தாத்தா நம்தாத்தா, தமிழ் வாழ்த்து, வளமாக வாழ்வோம், எங்கள் ஆலயம், எங்கள் ஆசிரியர், நாங்கள் நண்பர்கள், சவாலே சமாளி, உய்யும் வழி, பெருமை பெறுவோம், கணிதம் கற்போம், தலைவர்களாவோம் ஆகிய தலைப்புகளில் எழுதப்பெற்ற 11 சிறுவர் பாடல்களை இந்நூல் உள்ளடக்குகின்றது. வெற்றிமணி வெளியீட்டு வரிசையில் 19ஆவது நூல் இதுவாகும்.