ச.அ.அருள்பாஸ்கரன். திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், இல. 37/7, மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2011. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு.14-1, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
ix, 80 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 180., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-525356-7.
திருக்கோணமலை நகரினை மையமாக வைத்து, அதில் பிரபல கல்லூரி ஒன்றையும் தொடர்புபடுத்தி இச்சிறுவர் நாவலின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இளம் சிறார்கள் இந்நாவலின் முக்கிய கதாபாத்திரங்களாகின்றனர். சித்திரக்கலையில் முதுமானிப் பட்டம் பெற்ற ஓவியக் கலைஞரான நூலாசிரியர்- திருக்கோணமைலையின் மூத்த படைப்பாளி கேணிப்பித்தனின் (ச.அருளானந்தம்) மகனாவார். நூலுக்கான சித்திரங்களைத் தானே தீட்டியுள்ளார். திருக்கோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் சித்திரக்கலை ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.