சி.இராமச்சந்திரன். கொழும்பு 6: திருமதி சி.இராமச்சந்திரன், 34/5 விகார வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(2), 95 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
அமரர் சி.இராமச்சந்திரன் (12.10.1942-03.10.2009) அவர்கள் தான் ஆசிரியராகப் பணிபுரிந்த தினக்குரலின் ‘பரிசு’ சிறுவர் இதழுக்கு எழுதிய பௌத்தமத காவியமான குண்டலகேசி என்ற காப்பியத்தொடரின் சிறுவர் நாவல் வடிவம் இது. இந்நூலுக்கான சித்திரங்களையும் அவரே வரைந்துள்ளார். சந்ரா, சாணக்கியன், ரிஷி, செந்தமிழ்ச்செல்வன் போன்ற புனைபெயர்களிலும் எழுதியுள்ள சி.இராமச்சந்திரன் சிறந்ததொரு ஓவியராகவும், சிற்பியாகவும் தன்னை வளர்த்துக்கொண்டவர். அவரது படைப்புக்கள் எதுவும் வாழ்நாளில் நூலுருவாகியிராத நிலையில் அவரது குடும்பத்தாரின் முயற்சியினால் அமரரின் 31வது நாள் நினைவுதினத்தின்போது இந்நூல் வெளியிடப்பெற்றுள்ளது.