அ.அரசரெத்தினம். மூதூர் கிழக்கு: அ.அரசரெத்தினம், சேனையூர், 1வது பதிப்பு, 2011. (சென்னை 600094: பி.வி.ஆர்.ஆப்செட்).
xxii, 70 பக்கம், விலை: இந்திய ரூபா 40., அளவு: 17.5×12 சமீ.
மூதூர்கிழக்கு, சேனையூர் கவிக்குயிலன் அ.அரசரத்தினம் எழுதிய 52 கவிதைகள் கொண்ட தொகுப்பு. அறுபதுகளில் தனது கவிதைகளைக் கிழக்கிலங்கையின் மண்வாசத்துடன் எழுதத்தொடங்கியவர் இவர். கவிக்குயிலன், சேனையூரான், உண்மை விளம்பி ஆகிய புனைபெயர்களுள் இலக்கிய உலகில் வாழ்பவர். 14.7.2009 முதல் 26.12.2010 வரையிலான குறுகிய காலத்துக்குள் இவர் எழுதி தினகரன், தினக்குரல், தினமுரசு, சுடரொளி ஆகிய ஏடுகளில் வெளியானவை. அரசியல் ஆன்மீகம், பெண்களின் சமூகநலன் போன்ற பல விடயங்களில் இவரது கவிதைகள் எழுதப்பட்டுள்ளன.