8494 எல்லாப் பூக்களும் உதிர்ந்துவிடும்.

அலறி (இயற்பெயர்: அப்துல் லத்தீப் முஹம்மது றிபாஸ்). மருதமுனை: புதுப் புனைவு இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2008. (அக்கரைப்பற்று: நியு செலெக்ஷன்).

52 பக்கம், விலை: ரூபா 130., அளவு: 19.5×13.5 சமீ.

இக்கவிதைத் தொகுப்பின் வழியாக  எளிய காட்சிகளிலிருந்து ஆழ்ந்த கவனிப்பைத் தர விளைகின்றார் அலறி. நெகிழ்வான கவிதைமொழியின் சிக்கனமான வார்;த்தைகளால் அமைந்த இவரது கவிதைகளில்  பின்நவீனத்துவக் கூறுகள் பரவலாகக் காணப்படுகின்றன.  மருதமுனையைச் சேர்ந்த அலறி 1976இல் பிறந்தவர். சட்டத்துறைப் பட்டதாரியான இவர் பொதுச் சுகாதாரம், உளவளத்துணை என்பவற்றிலும் பட்டயம் பெற்ற சட்டத்தரணி. தற்போது பொதுச் சுகாதாரப் பரிசோதகராகப் பணியாற்றுகின்றார். தனது கவிதைகளுக்காக கிழக்கு மாகாண சபை விருதினை 2006இல் பெற்றவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 229743).

ஏனைய பதிவுகள்