வே.ஐ.வரதராஜன். யாழ்ப்பாணம்: ஜீவநதி, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்ச் 2012. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், நல்லூர்).
xi, 64 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 19.5×13 சமீ., ISBN: 978-955-0958-00-9.
17ஆவது ஜீவநதி வெளியீடாக இக்கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. இந்நூலாசிரியர் அரியாலையூர்க் கவிஞர் வே. ஐயாத்துரை அவர்களின் மகனாவார். அரச பணியில் முப்பத்தியேழு ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மறைந்த தாவீது அடிகளாரின் ஊக்குவிப்பில் 1972 முதல் எழுத்துத் துறையில் ஈடுபட்டுவந்தவர். இவரது சேவைக்கால அனுபவங்களின் கவித்துவ வெளிப்பாடாக இக்கவிதைகள் அமைகின்றன. என்கடன், படுநிலம், சைக்கிள் சவாரி, பயணம், முற்றத்து முருங்கைமரம், புதிய முகமூடிகள், போன்ற தலைப்புகளில் அவர் எழுதிய 35 கவிதைகள் இந்நூலை அலங்கரிக்கின்றன. சைக்கிள் என்ற கவிதையில் ஒரு தெருவோர சைக்கிள் கடைக்காரரின் வறுமைநிலை கண்டு வருந்துகிறார். பயணம் என்ற கவிதை பஸ்சில் அடாவடித்தனமாக ஏறும் பயணிகளின் நிலைகண்டு ஆத்திரப்படுகிறார்.முற்றத்து முருங்கைமரத்தின் வழியாக முருங்கையின் சிறப்பினை நமக்குத் தெரிவிக்கிறார்.வெளிச்சம் என்ற கவிதையில் தெருவோரத்து இருட்டில் தம் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நம் சமூகத்தின் அவலத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்.