மூதூர் முஹைதீன். மூதூர்: மூதூர் கலை இலக்கிய ஒன்றியம், நொக்ஸ் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2010. (மூதூர் 1: எஸ்.எச்.பிரின்டர்ஸ், பிரதான வீதி).
100 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-52246-0-4.
எழுத்துத் துறையில் மூன்று தசாப்தங்களைக் கடந்துள்ள மூதூர் முகைதீன், மூதூர் புனித அந்தோனியார் மகாவித்தியாலயத்தின் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவரின் நான்காவது கவிதைத் தொகுப்பு இதுவாகும். மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தின் தலைவராக இருந்த மூதூர் முஹைதீன் ஓசை கவிதைச் சிற்றிதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். 2007ம் ஆண்டுக்கான கலாபூஷணம் விருது இவருக்கு இலங்கை அரசின் கலாசார மரபுரிமை அமைச்சால் வழங்கப்பட்டது.