8498 ஒரு சோம்பேறியின் கடல்.

த.அஜந்தகுமார். யாழ்ப்பாணம்: அம்பலம் குழுமம், 41, இராஜ வீதி, நல்லூர், 1வது பதிப்பு, நவம்பர் 2009. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரிண்டர்ஸ், 545, பருத்தித்துறை வீதி, நல்லூர்).

xii, 78 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.

கவிதைத் தொகுதி. இவை சமூக இருப்பினை அடையாளப்படுத்துகின்ற அல்லது இருப்பினால் அந்தரிக்கின்ற கவிதைகளாகவும், காதல் உணர்வுநிலைசார்ந்த கவிதைகளாகவும் அமைகின்றன. ஆர்ப்பரிக்கும் என் கடல் என்னும் இறுதிக் கவிதையில் வாழ்வின் மீதான நம்பிக்கையும் வாழ்தலின் மீதான ஆர்வமும் பளிச்சிடுகின்றது. இவை 2004-2009 காலப்பகுதியில் எழுதப்பட்டவை. நெல்லியடி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவரான நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை உதவி விரிவுரையாளர். 2000ம் ஆண்டு முதல் கவிதைத்துறையில் ஈடுபட்டு வருகிறார்.

ஏனைய பதிவுகள்