8499 ஒரு மலரின் குரல்.

வரதா சண்முகநாதன். கொழும்பு: வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 6: விகடன் பதிப்பகம், 541/2 காலி வீதி).

xvi, 200 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-7287-1-6.

மலர் என்று உள்வட்டத்தினரால் அழைக்கப்படும்  வரதா சண்முகநாதனின் கவிதைக் குரல் துதிப்பாடல்கள், தத்துவப்பாடல்கள், நினைவுகள், பொதுப்பாடல்கள், சிந்தனைச் சிதறல்கள் என்று பல்வகைப்பட்ட தொகுப்பாகி நிற்கின்றது. துதிப்பாடல்களில் இறைவனின ;பல்வேறு வடிவங்களையும் அன்பு, தூய்மை, கருணை, சாந்தி, அமைதி ஆகிய உருவங்களில் தரிசித்துப் பரவசமடையும் பாங்கு காணப்படுகின்றது. தத்துவப்பாடல்கள் நூலாசிரியரின் கல்வி மற்றும் அனுபவ அறிவின் ஆழத்தைக் காட்டுகின்றன. நினைவுப் பாடல்களில் சமகால மாற்றங்களுக்கேற்ப சமுதாயம் வாழப்பழகிக்கொள்ள வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது.  விதியை மதியால் வெல்லவேண்டும் என்கிறார். சிந்தனைச் சிதறல்களில் சத்தியம், தர்மம், அன்பு, பண்பு ஆகிய வாழ்க்கைநெறிகளுக்கூடாக கவிதைகளை யாத்திருக்கிறார். பண்டைத்தமிழர்களின் வாழ்வுமுறையைப் போற்றி அவ்வழி நின்றொழுக வேண்டும் என்ற கருத்தும் ஆங்காங்கே புலப்படுகின்றது.

ஏனைய பதிவுகள்

15340 கட்டிலில் இருந்து அண்டம் வரை.

எஸ்.பீ.ராமச்சந்திரா (மூலம்), நாகேந்திரம் நவராஜ் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 2வது பதிப்பு, செப்டெம்பர் 2021, 1வது பதிப்பு, மார்ச் 2015. (பருத்தித்துறை: