இ.தியாகலிங்கம். சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை).
64 பக்கம், விலை: இந்திய ரூபா 95., அளவு: 11.5×17.5 சமீ., ISBN: 978-81-89748-79-1.
நூலாசிரியர் தற்போது புலம்பெயர்ந்து நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வாழ்ந்துவருகிறார். 1994இல் அழிவின் அழைப்பிதழ் என்ற நாவலினூடாக இலக்கிய உலகில் அறிமுகமான இவர், அழிவின் அழைப்பிதழ், நாளை, பரதேசி, வரம்ஆகிய வெற்றிகரமான நாவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டவர். புகலிட வாழ்வின் தயரங்களையும் புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகளையும் பின்புலமாகக் கொண்டு இக்குறுங் கவிதைகள் இயற்றப்பட்டுள்ளன. மொத்தம் நாற்பது கவிதைகளை இச்சிறு நூல் உள்ளடக்கியுள்ளது.