8524 நபிகள் நாயகரின் நான்மணிக்கடிகை.

ஏ.எம். அப்துல் கஹ்ஹார்.  கொழும்பு: உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2002. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44 புகையிரத வீதி).

vi, 34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, ISBN: 955 8806 14 5.

துறைமுகங்கள் அபிவிருத்தி கப்பற்றுறை அமைச்சு, இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்துடன் இணைந்து  2002 ஒக்டோபர் 22, 23,24ம் திகதிகளில் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டினையொட்டி வெளியிடப்பட்ட நூல். ஹதீஸ் என்ற அரபுச்சொல்லின் பொருள் செய்தியாகும். அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் கூறியுள்ள ஹதீஸ்களான பொன் மொழிகள்; பலவற்றுள், ஒரு பொன்மொழியில் ஒரு மணிக்கருத்தை மட்டும் வலியுறுத்தியும், சிலவற்றுள் இவ்விரண்டு பொன்மொழிகளில் மும்மூன்று மணிக்கருத்துகளை வலியுறுத்தியும், இன்னுஞ் சிலவற்றுள், ஒவ்வொரு பொன்மொழியிலும் நந்நான்கு மணிக்கருத்துக்களையோ ஐவைந்து மணிக்கருத்துக்களையோ வலியுறுத்தியும் கூறப்பட்டுள்ளது.  இவற்றுள் ஒவ்வொரு பொன்மொழியிலும் நந்நான்கு மணிக்கருத்துக்களை  வலியுறுத்திக்கூறியுள்ள நபி மொழிகளுள் ஐம்பது நபிமொழிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை ஐம்பது வெண்பாக்களாக ஆக்கியுள்ளார். ஒவ்வொரு வெண்பாவிலும் கூறப்பட்டுள்ள நான்கு மணிக்கருத்துகளுக்கும் உரிய மூலக்கருக்கள் நபிநாயகம் மொழிந்தவை ஆதலால் நூலுக்கு நபிகள் நாயகரின் நான்மணிக்கடிகை எனப் பெயரிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்