8547 மௌனமே வாழ்வாக: கவிதைத் தொகுதி.

க.சுதர்சன். பருத்தித்துறை: க.சுதர்சன், அம்பிகை வாசம், பிராமணர் ஒழுங்கை, தும்பளை மேற்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (பருத்தித்துறை:  நியு எஸ்.பி.எம். ஓப்செட் பிரிண்டர்ஸ், வி.எம்.வீதி).

(10), 25 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 20×14.5 சமீ.

ஜீவநதி, அஞ்சல்வழி, தினக்குரல் ஆகிய ஊடகங்களில் வெளிவந்த சுதர்சனின் கவிதைகளின் தொகுப்பு இது. என்னை வழிநடத்து என்று வேண்டுதலுடன் தன்னைச் சமூகத்திற்கு பயனுள்ளவனாக மாற்றும்படி கேட்டுத் தொடங்கும் இவ்விளங்கவிஞனது கவிதைகளில், மௌனம் சாதித்தல் என்பதை விட மௌனத்தாலே சாதித்தல் சிறப்பு என்று தெடர்கிறார். உரிமை மறுக்கப்பட்ட சிறுவர்களையும், தொலைக்காட்சித் தொடர்களின் சமூகச் சீரழிவையும் தனது கவிதைகளின் ஊடாகச் சிந்திக்க வைக்கிறார்.பருத்தித்துறையில் தும்பளை கிராமத்தைச் சேர்ந்த கமலநாதன் சுதர்சன் 9.5.1989இல் பிறந்தவர். தும்பளை சிவப்பிரகாச மகாவித்தியாலயம், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர்.

ஏனைய பதிவுகள்

15411 கலை இலக்கியக் களமும் கடந்த காலமும்: வரலாற்றுக் குறிப்பேடு-3.

கோகிலா மகேந்திரன், ராஜி கெங்காதரன் (தொகுப்பாசிரியர்கள்). தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், நூறாவது நிகழ்வு வெளியீடு, 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 56 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5