8548 யுக புராணம்: மே 2009இன் பின்பான கவிதைகள்.

நிலாந்தன். United Kingdom: எழுநா ஊடக நிறுவனம், 4, Kettering Road, Isham, Kettering, NN14 1HQ, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (சென்னை 6000005: எஸ்.வி.பிரின்ட்ஸ்).

40 பக்கம், விலை:  இந்திய ரூபா 30., அளவு: 21.5×14 சமீ. ISBN: 978-81-908076-9-2.

யாழ்ப்பாணத்தில் பிறந்த நிலாந்தன் அறியப்பட்ட ஒரு கவிஞர், அரசியல் விமர்சகர். இலங்கையில் திசை பத்திரிகையிலும் ஈழநாதத்திலும்அரசியல் விமர்சனக் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதிவந்தவர். இவரது கேலிச் சித்திரங்களும் கதை விளக்கச் சித்திரங்களும் திசையில்  முன்னர் வெளியாகியுள்ளன. விடுதலைக்காளி (தெரு நாடகம்), அகதிகளின் கதை, யுத்தத்தின் நாட்கள், நவீன பஸ்மாசுரன் ஆகிய நாடகப் பிரதிகளும் பிள்ளையார் போர் ஓவியங்கள் என்னும் ஓவியங்களும் இவரது முக்கியமான படைப்புக்கள்.  நூலுருவில் வெளியாகிய மண் பட்டினங்கள், வன்னி மான்மியம், யாழ்ப்பாணமே ஓ எனது யாழ்ப்பாணமே, இனி எனது நாட்களே வரும், நவீன பஸ்மாசுரன் ஆகிய படைப்புக்களின் தொடராக இப்பொழுது இக்கவிதைத்தொகுதி வெளிவந்துள்ளது. ஒரு யுக முடிவின் காலத்தில், உத்தரிப்புகளால் நிறைந்த அவல வாழ்வின் வார்த்தைகளே இக்கவிதைகள். உத்தரிப்பின் வலிகளையே ஆயதமாக்கி அந்த அழிவுநாட்கள் இக்கவிதைகளில் மீளப் படைக்கப்பட்டுள்ளன. அவை யுத்தத்தின் ஒரு சாட்சியமாகவும் முதன்மைபெறுகின்றன.

ஏனைய பதிவுகள்

10901 பி.பி.தேவராஜ்: ஒரு கண்ணோட்டம்.

கே.வி. இராமசாமி. கண்டி: அகிலம் பப்ளிக்கேஷன்ஸ்,  98, டி.எஸ்.சேனநாயக்க வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1994. (அச்சக விபரம் தரப்படவில்லை). 16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ. இலங்கையில் ஐந்தாண்டுகள் இந்துசமய,