ஜின்னாஹ் ஷரிபுத்தீன் (மூலம்), லுணகல ஸ்ரீ (தொகுப்பாசிரியர்), மருதமுனை: அன்னை வெளியீட்டகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ்).
x, 216 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-54039-3-1.
கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் எழுதிய கவிதைகளுள் தேர்ந்த 102 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பல்வகை மகுடங்களினகீழ் பல்வேறு சந்தர்ப்பங்களில் இயற்றப்பெற்றதும் முன்னர் பிற தொகுப்புகளில் இடம்பெறத் தவறியவையுமான கவிதைகள் இவை. கிழக்கு மாகாணத்தில் முற்காலத்தில் பல்வகைப் பொருட்களைசேமித்து வைக்கும் ஒரு வகைக் கைப்பையினை வல்லுவம் என்பர். (இதனை வெற்றிலைப்பை என ந.சி.கந்தையாபிள்ளை தனது செந்தமிழ் அகராதியில் குறிப்பிடுகின்றார். வல்லுவப்பை என்பதனை 1862ம் ஆண்டு வெளிவந்த எம்.வின்ஸ்லோ தமிழ் ஆங்கில அகராதியில் A Large Betel Pouch with several partitions என்று குறிப்பிடுகின்றார்). அதனையே இக்கவிதைத் தொகுப்புக்கும் தலைப்பாக்கியுள்ளமை பொருத்தமாயுள்ளது.