உமா வரதராஜன். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்).
175 பக்கம், விலை: இந்திய ரூபா 125., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80240-84-8.
தன் அனுபவங்களையும் உணர்வுகளையும் கலையாக்கும் ஒருவராக உமா வரதராஜன் அவருடைய படைப்புகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது படைப்புகள் வெளிப்படுத்தும் சமூக யதார்த்தமும்அவை ஏற்படுத்தும் கலைப் பாதிப்பும் ஆழமானவை. சமூகம் தன்னகத்தே கொண்டுள்ள பொய்மையையும் போலித்தனங்களையும் முரண்களையும் அவை அம்பலப்படுத்துகின்றன. அவற்றுக்கிடையே அகப்பட்டு நசுங்கும் மனித உள்ளத்தின் அவஸ்தையை வாசகர் மனதிலும் தொற்றச்செய்கின்றன. இதுவே இவரது கதைகளின் வெற்றியாகும். சுமார் முப்பது ஆண்டுக்கால இடைவெளியில் இவரால் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு இதுவாகும். தொலைவில் தெரியும் ஒற்றை நட்சத்திரம், வெயிலும் வெறுமையும், சின்னஞ்சிறு சிறகுகள், மாலை சூட்டிகள், பெரிய வெள்ளியும் புனித ஞாயிறும், முகங்கள், அசோகவனங்கள், உயர, விளிம்பு, சூரியனின் முன்புறம், ஜெனி, எலியம், அப்பா இல்லாத ஊரில், கள்ளிச்சொட்டு, அரசனின் வருகை, வெருட்டி ஆகிய கதைகள் இத்தொகுப்பில் இடம்பிடித்துள்ளன.