8584 ஏற்றம் இறக்கம்.

ஆரையம்பதி க.சபாரெத்தினம். மட்டக்களப்பு: க.சபாரெத்தினம், இல.177V, 6ம் குறுக்குத்தெரு, செல்வா நகர், ஆரையம்பதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் இல்லை. (காத்தான்குடி: டொட் கொம் அச்சகம்).

x, 166 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-53426-0-5.

ஆரையம்பதி க.சபாரத்தினம் எழுதியுள்ள 14 சிறுகதைகளின் தொகுப்பு இது. இது இவரது நான்காவது வெளியீடு. எழுபது தொடக்கம் எண்பதுகளின் ஆரம்பம் வரையான காலகட்டத்தை கதைகள் சித்திரிக்கின்றன. ஏற்றம் இறக்கம், நாளை என்பதில்லை, தொங்க தோட்டமும் இறங்கு படிகளும், அவனுக்குத் தான் தெரியும், காதல் என்பது தேன்கூடு, இப்ப காலம் மாறிப் போச்சி, மதியபோசன இடைவேளை, தகுதி, விபரீதம், பத்திரிகை விளம்பரம், உறவின் எல்லை, பேரின்ப ஆசை, நீதியான கோரிக்கை, புதிய சமுதாயத்தின் பழைய தலைமுறை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட கதைகள் இவை. நாளை என்பதில்லை என்ற கதை சமூகத்தில் திறமையுடன் வாழும் ஒரு ஏழை மேசன் அன்றாட வாழ்வின் அழுத்தங்களைச் சமாளிக்க முடியாது திண்டாடும் போக்கைக் காட்டி வறுமைக்குள் திறமை கரைந்துவிடுமா என்ற கேள்வியை எழுப்புகின்றது. காதல் என்பது தேன்கூடு என்ற கதை காதலியிடமிருந்து பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு காதலனின் கதை. தகுதி என்ற கதையில் குடும்ப உறவுகளுக்குள் தகுதி அந்தஸ்து என்பன எவ்வாறு பாதிக்கின்றது என்பதை நாசூக்காகச் சொல்கின்றது. விபரீதம் என்ற கதை சகுனம்-முழிவியலம் போன்ற பிற்போக்கு அம்சங்களை நியாயப்படுத்துவதாகவும் அவற்றை மெய்ப்பிப்பதாகவும் அமைந்துள்ளது. புதிய சமுதாயத்தின் பழைய தலைமுறை என்ற கதை மண்வாசனை மிக்கது. மட்டக்களப்பு-படுவான்கரைப் பிரதேச விவசாய மக்களின் பாரம்பரிய கிராமிய வாழ்க்கைமுறையினைப் படம்பிடித்துக் காட்டுவதாகவும் புதுமையை விரும்பி மாற்றத்தைப் புகுத்த முயலும் ஒருவனை ஒரு சமூகம் மறுத்து பழைமையின் பெருமையைக் காக்கமுயல்வதாக அமைகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  224867).

ஏனைய பதிவுகள்

16451 மருத முகிழ் 2022 (இதழ்10).

வீரசிங்கம் பிரதீபன் (மலராசிரியர்). வவுனியா: பிரதேச செயலகம், வவுனியா வடக்கு, 1வது பதிப்பு, 2022. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி). x, 248 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,